.webp)

Colombo (News 1st) உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளது.
2025ஆம் ஆண்டில் கடந்த 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஈட்டப்பட்ட வரி வருமானம் 2002 பில்லியன் ரூபாவாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடத்தின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் 60.079 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
