நியூயோர்க் நகர மேயரானார் Zohran Mamdani

நியூயோர்க் நகர மேயரானார் Zohran Mamdani

by Staff Writer 05-11-2025 | 7:55 PM

Colombo (News 1st) அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புதிய மேயராக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான Zohran Mamdani தெரிவாகியுள்ளார்.

இந்த விடயம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

நியூயோர்க் மேயர் தேர்தலில் ஜனாநாயக கட்சி வெற்றி பெற்றால் அந்நகருக்கான மத்திய அரசாங்கத்தின் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று(04) எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே நியூயோர்க் நகர மக்கள் Mamdani-க்கு இந்த வெற்றியை வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

முன்னாள் ஆளுநரும் சுயேட்சை வேட்பாளருமான Andrew Cuomo-வை தோற்கடித்து நியூயோர்க் நகரத்தின் புதிய மேயராக Zohran Mamdani தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய - அமெரிக்க வம்சாவளியான Zohran Mamdani பிரபல இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகனாவார்.

Zohran Mamdani 1991ஆம் ஆண்டு உகண்டாவில் பிறந்து தனது 7ஆவது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.