.webp)
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று(19) 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இராஜங்கனை, அங்கமுவ, தெதுறு ஓயா, கலாஓயா ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.