.webp)
களுத்துறை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த இரண்டாம் தர ஜெய்லர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலையின் அதிகாரியொருவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய குறித்த ஜெய்லர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்
.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.