முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிப்பு

by Staff Writer 09-09-2025 | 3:04 PM

Colombo (News 1st)  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று(09) உத்தரவிட்டார்.

சந்தேகநபரை 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு வௌிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத்திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 02 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த 29ஆம் திகதி மற்றுமொரு வழக்கிற்காக அவர் பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலையானதுடன் இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டு அவரை விளக்கமறியலில் வைத்தார்.