மேலதிக வாகனபாகங்களை பொருத்தினால் சட்ட நடவடிக்கை..

வாகனங்களில் மேலதிக உதிரிப்பாகங்களை பொருத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 08-09-2025 | 2:23 PM

விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் மேலதிக உதிரிப்பாகங்களை பொருத்துவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை இன்று(08) முதல் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஒலி நாடாக்கள், விட்டு விட்டு ஔிரக்கூடிய மின் குமிழ்கள் மற்றும் சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை பொருத்திய வாகனங்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் கருவிகள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இத்தகைய வாகனங்களை பரிசோதிப்பதற்காக இன்று(08) முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.