2025 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்..

2025 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும் - பரீட்சை திணைக்களம்

by Staff Writer 02-09-2025 | 3:07 PM

Colombo (News 1st)  2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 307,951 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.