மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 01-09-2025 | 3:18 PM

Colombo (News 1st) யாழ்.மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனூடாக வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும் கிழக்கு, தென் மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள், வலை பதப்படுத்தும் வசதிகள், வானொலி தொடர்பு மைய வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் விஸ்தரிக்கப்படவுள்ளன.