''ஓர் அணியாக விளையாடிய விதம் மகிழ்ச்சி'' - சனத்

''ஓர் அணியாக விளையாடிய விதம் மகிழ்ச்சி'' - சனத் ஜயசூரிய

by Staff Writer 01-09-2025 | 11:27 AM

இலங்கை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் வௌிப்படுத்திய திறமைகளை கொண்டு ஒரு அணியாக தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

நேற்று(31) நடைபெற்ற தொடரின்  2ஆவது போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை பெற்றது.

278 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49. 3 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய பெத்தும் நிசங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 07ஆவது சதத்தை பூர்த்தி செய்து 122 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் சரித் அசலங்க 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த வெற்றியுடன் இலங்கை அணி சிம்பாப்வே அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.