.webp)
தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு கோபுரம் நிர்மாணிப்பதற்கான செலவில் 75 வீதம் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கிராமிய பிரதேசங்களிலும் தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளிலும் இடையூறுகளை நீக்குவது இதன் நோக்கமென டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.