.webp)
Colombo (News 1st) முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று(20) கைது செய்யப்பட்டுள்ளார்.
காலிமுகத் திடல் அரகலய மக்கள் போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சந்தேகநபராக அவர் சட்ட மாஅதிபரால் பெயரிடப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தம்மை கைது செய்யாதிருக்குமாறு கோரி முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று நிராகரிக்கப்பட்டது.