.webp)
Colombo (News 1st) அனைத்து மாகாணங்களிலும் குற்றவிசாரணை பிரிவுகளை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களை தடுக்கும் விசேட நடவடிக்கையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களால் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.