மின்சாரத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

by Staff Writer 06-08-2025 | 6:40 PM

Colombo (News 1st) மின்சார திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று(06) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் இதற்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன் எதிராக 25 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.

இலங்கை மின்சார சட்டத்தில் 2024ஆம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை 12 நிறுவனங்களாக பிரித்து மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

புதிய சட்டத்தின் ஊடாக இந்த யோசனைகள் நீக்கப்பட்டு 05 அரச நிறுவனங்களின் கீழ் மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தால் சவாலுக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.