பொலிஸ் நிலைய துப்பாக்கியை திருடிய சார்ஜன் கைது

பொலிஸ் நிலைய துப்பாக்கியை திருடி விற்ற சார்ஜன் கைது

by Staff Writer 06-08-2025 | 6:42 PM

Colombo (News 1st) கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் 08 ரவைகளுடன் கைத்துப்பாக்கியை திருடிய பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டு பிரிவின் பாதுகாப்பு துப்பாக்கி பெட்டகத்திலிருந்த கைத்துப்பாக்கியை குறித்த சார்ஜன் திருடியுள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.

சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன் கைத்துப்பாக்கியை திருடும் காட்சிகள் பொலிஸ் நிலைய பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் சந்தேநபரான பொலிஸ் சார்ஜனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த கைத்துப்பாக்கி 10 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை 07 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் சார்ஜனுக்கு திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.