.webp)
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் Samantha Joy Mostyn 04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(06) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த சமந்தா ஜோய் மொஸ்டின் உள்ளிட்ட குழுவினரை வௌிவிகார அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அவுஸ்திரேலியாவின் உதவி வழங்கும் வேலைத்திட்டங்கள் சிலவற்றையும் அவர் இந்த விஜயத்தின் போது கண்காணிக்கவுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மைகள் காணப்படும் ஒத்துழைப்பு சார்ந்த துறைகளை விஸ்தரிப்பதற்குரிய சந்தர்ப்பங்களை கண்டறிதல் என்பன அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தின் விஜயத்தின் நோக்கம் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.