தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நிறைவேற்றம்

by Chandrasekaram Chandravadani 05-08-2025 | 4:38 PM

Colombo (News 1st) தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எவரும் எதிராக வாக்களிக்கவில்லை.

ஒருவர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தார்.