தெஹிவளை துப்பாக்கிச்சூடு;தொடர்புடையவர் உயிரிழப்பு.

தெஹிவளை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் உயிரிழப்பு..

by Staff Writer 25-07-2025 | 3:56 PM


 

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தார்.

இன்று(25) அதிகாலை 4.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கஹதுடுவ பகுதியில் சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டிற்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரப்படை உறுப்பினர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.