.webp)
Colombo (News1st) காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கொலை செய்யும் நபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு 200 வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு 100 கெப் ரக வாகனங்களும், 150 மோட்டார் சைக்கிள்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க பட்டபெந்தி மேலும் தெரிவித்தார்.