.webp)
Colombo (News 1st) தெஹிவளை - பார்க் வீதியில் நகர சபை பரிசோதகரை இலக்கு வைத்து இன்று(24) காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அதிகாரியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதிலும் குறித்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்பின்னர் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரையில் வௌியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் 03 குழுக்களின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.