.webp)
Colombo (News 1st) 2025 டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மாநாடு இன்றும்(24) நாளையும்(25) கொழும்பில் நடைபெறவுள்ளது.
மாநாட்டில் பங்குபற்றவுள்ளவர்கள் மற்றும் வளவாளர்களின் விசேட கூட்டம் கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் நேற்று(23) இடம்பெற்றது.
இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கத்தின் தலைமையில் இந்த மாநாடு மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'ஆசியாவில் டிஜிட்டல் அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.
இம்முறையும் MTV/MBC மற்றும் நியூஸ் ஃபெஸ்ட் இணைந்து உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை வழங்குகின்றன.