.webp)
Colombo (News1st) சிரச ரிவியின் புதிய ரியாலிட்டி ''டான்சிங் ஸ்டார்'' நிகழ்ச்சிக்கான அறிமுக நிகழ்வு கொழும்பு வன் கோல் ஃபேஸ் வளாகத்தில் இன்று(24) பிற்பகல் நடைபெற்றது.
இளம் நடனக்கலைஞர்கள் இதன்போது தமது திறமைகளை வௌிப்படுத்தினர்.
எதிர்வரும் சனிக்கிழமை முதல் வார இறுதி நாட்களில் இரவு 8.30 க்கு ஔிபரப்பாகவுள்ள டான்சிங் ஸ்டார் நிகழ்ச்சிக்கான நடுவர்களும் இதன்போது அறிமுகம் செய்யப்பட்டனர்.
சந்திமால் ஜயசிங்க, சாரா அபேரத்ன , துஷ்யந்த் வீரமன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செயற்படவுள்ளனர்.
இம்முறை டான்ஸிங் ஸ்டார் உலகின் முன்னணி சமூக ஊடக வலையமைப்பான டிக் டொக் உடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிரச டான்சிங் ஸ்டார் நிகழ்ச்சிக்கான டிஜிட்டல் பங்காளராக டிக் டொக் இணைந்துள்ளது.