.webp)
அமெரிக்காவின் தீர்வை வரி தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் சூம் தொழில்நுட்பத்தினூடாக இன்று(23) முன்னெடுக்கப்படவுள்ளது.
இரு தரப்பினருக்கிடையிலான இறுதி இணக்கப்பாடுகளின் அடிப்படையிலான இருதரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதிகள் மீது 44 வீதமாக அறிவிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியை 30 வீதம் வரை குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தார்.
குறித்த தீர்வை வரி ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கு முன்னர் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான இயலுமை கிடைக்குமென நம்புவதாக கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ குறிப்பிட்டார்.