.webp)
Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தம்மை கைது செய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(23) சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு நிராகரிக்கப்பட்டதையடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 30ஆம் திகதி அதனை பரிசீலிப்பதற்கு நீதவான் இந்திரிகா காலிங்கவங்ஷ திகதியிட்டுள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைத்திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்திற்கு 02 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.