அடுத்த பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன

அடுத்த பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

by Staff Writer 23-07-2025 | 7:47 PM

Colombo (News 1st) அடுத்த பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் குழாத்தின் சிரேஷ்ட  நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன இதற்கு முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டிருந்தார்.

தற்போதைய பிரதம நீதியரசர் மூர்து பெர்னாண்டோ எதிர்வரும் 27ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.