.webp)
Colombo (News 1st) கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஆய்வு அறிக்கை மொனராகலை மாவட்ட செயலாளர் பசன் ரத்நாயக்கவின் தலைமையில் மொனராகலை நூலகத்தில் இன்று(22) கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் மொனராகலை மாவட்ட நூலக பொறுப்பதிகாரி D.M.C.P. பண்டார, கம்மெத்த பொதுச் செயலாளர் பிரசன்ன அத்துகோரல, கம்மெத்த தேசிய அமைப்பாளர் உதய வன்னிஆரச்சி உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர்.
கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை 7 கம்மெத்த ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கம்மெத்த குழு மற்றும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கிராமங்கள் தோறும் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்க்கை நிலை தொடர்பான தகவல்களை திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைகள் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமை குறித்த அறிவியல் விளக்கத்தை வழங்குகின்றன.
நாட்டிலுள்ள அனைவருக்கும் அறிக்கைகளைப் பரிசீலிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில், இந்த அறிக்கைகள் எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.