.webp)
Colombo (News 1st) மரத்தை வெட்டியதற்காக 2 வருடங்களின் பின்னர் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தி இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்து மக்களால் அதிகளவு நேசிக்கப்படும் Sycamore Gap மரமே வெட்டப்பட்டுள்ளது.
மரம் வெட்டப்பட்டமை மற்றும் வெட்டப்பட்ட மரம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த Hadrian's Wall மீது வீழ்ந்ததால் ஏற்பட்ட சேதம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 57 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மரம் 1860 முதல் 1890ஆம் ஆண்டுக்குட்பட்ட காலப்பகுதியில் நடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.