இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது சர்வதேச T20 : பங்களாதேஷ் வெற்றி

by Staff Writer 16-07-2025 | 10:17 PM

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் தொடரை 2-1 என கைப்பற்றியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் தடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

பெதும் நிஷ்ஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

இலங்கை அணியின் முதல் 6 விக்கெட்களும் 88 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

தசுன் ஷானக்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் எட்டாவது விக்கெட்டில் பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தின் மூலம் 29 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இருபதாவது ஓவரில் இலங்கை அணி 22 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சார்பில் அணித் தலைவர் லிடன் தாஸ் 32 ஓட்டங்களைப் பெற்றார்.

இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து பங்களாதேஷ் அணி வெற்றி இலக்கை கடந்தது.

அதற்கமைய பங்களாதேஷ் அணி 2-1 என்ற கணக்கில் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.