.webp)
பொரளை பகுதியில் இன்று(07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணியின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வை கருத்தில் கொண்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெறவுள்ள இன்றைய நிகழ்வில் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் பங்கேற்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோட் பிளேஸ், கின்சி வீதி முதல் நந்ததாச கோதாகொட சந்தி வரையான வீதிகளில் கனரக வாகனங்கள் நுழைவதை இன்று(07) பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.