.webp)
Colombo (News 1st) கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் இன்று(06) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 12, 30 மற்றும் 44 வயதான மூவரும் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய், மகள் மற்றும் மற்றுமொரு ஆண் ஆகியோரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைத்துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.