எட்டியாந்தோட்டை விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

எட்டியாந்தோட்டை வாகன விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

by Staff Writer 06-07-2025 | 11:57 AM

Colombo (News 1st) எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுள்ளவல விகாரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் - கொழும்பு வீதியின் பதுள்ளவல விகாரை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கரவனெல்ல நோக்கி பயணித்த தனியார் பஸ், முன்னால் பயணித்த வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

நாவலப்பிட்டி - பவ்வாகம பகுதியைச் சேர்ந்த 84 வயதானவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.