.webp)
ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்புக்கான மென்பொருளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
மொறட்டுவை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பிரிவுடன் இணைந்து இந்த மென்பொருள் தயாரிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன கூறுகிறார்.
எதிர்வரும் 06 மாதங்களுக்குள் இந்த மென்பொருளை சாதாரண மக்களுக்காக வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மென்பொருளினூடாக சிங்களத்தில் உரையாடி சில செக்கன்களில் தமிழ் மொழிக்கும் தமிழ் மொழியில் உரையாடி சில செக்கன்களில் சிங்கள மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்கான இயலுமை ஏற்படுத்தப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.