.webp)
Colombo (News 1st) சிறுபோக நெல் கொள்வனவு இன்று(03) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இம்முறை ஈரப்பதனான நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் 125 ரூபாவிற்கும் கீரிசம்பா நெல் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 06 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.