.webp)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் முதல் 2 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது நுளம்பு பெருகக்கூடிய 10,591 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த 2 நாட்களில் மாத்திரம் 48,354 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் 3ஆம் நாளுக்கான சோதனை நடவடிக்கைகள் இன்று(02) முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த சில மாதங்களாக பெய்த கடும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் 16 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் கடந்த 30ஆம் திகதி முதல் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்காக 1,100 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு 5 வளாகங்களில் ஒரு வளாகம் நுளம்பு பெருக்கத்திற்கான உகந்த நிலையைக் கொண்டிருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 28,752 டெங்கு நோயாளர்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளனர்.
அதில் அதிக நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயயே பதிவாகியுள்ளனர்.