வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செய்தி..

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செய்தி..

by Staff Writer 12-05-2025 | 2:03 PM

Colombo (News1st)புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த போதனைகளை நடைமுறையில் புரிந்துகொண்டு, மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா ஆகிய 4 பிரஹ்ம விஹாரணங்களுக்கமைய செயல்படுவதன் மூலம், போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை அதிகமாகியுள்ளதாக வெசாக் தின செய்தியை வௌியிட்டு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடு சரியான மாற்றத்தை நோக்கி பயணித்து வரும் இச்சந்தர்ப்பத்தில், மனித உள்ளங்களை ஆற்றுப்படுத்த இந்த வெசாக் காலம் மிகவும் பொருத்தமானது என்பது தனது நம்பிக்கையாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த நோக்கத்திற்காக அனைவரும் ஒருமனதுடனும் ஒற்றுமையாகவும் கைகோர்ப்போம் என இந்த வெசாக் செய்தியின் ஊடாக அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.