பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை..

பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 09-05-2025 | 3:46 PM

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் Online ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(09) முதல் ஆரம்பமாகின்றது.

WWW.UGC.AC.LK எனும் இணையத்தள முகவரியின் ஊடாக இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்பின்னர் பதிவு நடைமுறையின் போது தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக விருப்ப ஒழுங்கை மாற்றியமைப்பதற்காக மாத்திரம் இரண்டு வார அவகாசம் வழங்கப்படவுள்ளது.

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 43,300 மாணவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.