.webp)
Colombo (News 1st) இந்தியாவின் சண்டிகர் நகரில் பாகிஸ்தானினால் வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என அப்பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சண்டிகரிலுள்ள விமானப்படை தளத்தினால் வழங்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பொதுமக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் வீட்டின் மாடிகளின் முகப்புப் பகுதிகளுக்கு வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.