இராணுவ விமானம் விபத்து - 12 பேர் மீட்பு

இராணுவ விமானம் விபத்து - 12 பேரும் பாதுகாப்பாக மீட்பு

by Staff Writer 09-05-2025 | 10:41 AM

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான விமானத்தின் 2 விமானிகள் உள்ளிட்ட 12 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரொன்று இன்று(09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

ஹிங்குராங்கொட விமானப் படை முகாமில் இருந்து மாதுரு ஓயா பகுதியில் இடம்பெற்ற கண்காட்சியொன்றில் பறந்துகொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.

இதன்போது இராணுவ விசேட படையணி உறுப்பினர்கள் சிலர் அதில் இருந்ததாக குரூப் கெப்டன் எரந்த கீகனகே குறிப்பிட்டார்.