வடக்கு ரயில் மார்க்கத்தில் இருவழி போக்குவரத்து

வடக்கு ரயில் மார்க்கத்தில் இருவழி போக்குவரத்து

by Staff Writer 08-05-2025 | 7:52 AM

Colombo (News 1st)  வடக்கு ரயில் மார்க்கத்தின் பொல்கஹவெல மற்றும் மஹவ ரயில் நிலையத்திற்கு இடையிலான மார்க்கத்தை இருவழி போக்குவரத்தாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டத்தின் கீழ் பொல்கஹவெல மற்றும் குருணாகல் ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் மார்க்கத்தை இருவழி மார்க்கமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

ரயில் போக்குவரத்து தாமதத்தை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரையில் கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெல வரை மாத்திரமே இருவழி ரயில் மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.