.webp)
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க இன்று(08) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம் செய்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்டத்தின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் பதவி வெற்றிடத்திற்காக சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.