.webp)
Colombo (News 1st) நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதை அடுத்து 4 பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில்,
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும்
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.