.webp)
Colombo(News1st) வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்த "லொக்கு பெட்டி" என அழைக்கப்படும் லத்துவாஹங்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பெலரூஸில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதற்கமைய பெலரூஸிலிருந்து அவர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
கொஸ்கொட சுஜி மற்றும் மாகந்துர மதுஷ் ஆகிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடன் அவர் நெருங்கி செயற்பட்டுள்ளதுடன் பின்னர் லொக்கு பெட்டி எனும் தனியொரு குழுவை அமைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.