.webp)
Colombo(News1st) சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வாழ்க்கை செலவு மற்றும் நாட்டின் எதிர்காலப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் ஆதிக்கம் செலுத்திய தேர்தலில் சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்தடவையாக பிரதமர் லோரன்ஸ் வோங் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சி 65.6 வீத வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் உள்ள 97 ஆசனங்களில் 87 ஆசனங்களை கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான மத்திய-இடது தொழிலாளர் கட்சி 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
பணவீக்கம், சம்பளப் பிரச்சினை மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு சிங்கப்பூர் மக்கள் ஆதரவளித்துள்ளனர்.