குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

5,6,7 ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு

by Staff Writer 03-05-2025 | 5:15 PM

Colombo (News 1st) கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

ஒருநாள் சேவைக்காக அமுலிலுள்ள 24 மணித்தியால சேவை குறித்த நாட்களில் இடம்பெறாது எனவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 06, 07 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில், ஒருநாள் சேவை உள்ளிட்ட மக்கள் சேவைகள் இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக மேல் மாகாண வாகன வருமான வரிபத்திரம் விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 05, 06 ஆம் திகதிகளில் இடம்பெறாதென மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விநியோக சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதும் உரிய நிதியை செலுத்தி சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனவு மேலதிக தண்டபணம் அறவிடப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் 05, 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மே மாதம் 07 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.