.webp)
Colombo (News1st) கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 494 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரொயின் போதைப்பொருள் தொகை இன்று(28) அழிக்கப்படவுள்ளது.
புத்தளம், பாலாவி பகுதியிலுள்ள சீமெந்து நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் இந்த போதைப்பொருள் தொகை அழிக்கப்படவுள்ளது.
2021 டிசம்பர் 15ஆம் திகதியன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 6 வௌிநாட்டு பிரஜைகளிடம் இருந்து 250 கிலோ 996 கிராம் ஹெரொயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
2022 ஏப்ரல் 19 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 7 வௌிநாட்டு பிரஜைகளிடம் இருந்து 243 கிலோ 52கிராம் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய குறித்த போதைப்பொருள் தொகை அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.