இந்திய பாகிஸ்தான் இடையில் இராஜதந்திர மோதல்

இந்திய பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர மோதல்

by Staff Writer 28-04-2025 | 7:16 PM

Colombo(News1st)   இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த முறுகலுக்கு மத்தியில் இந்திய கடற்படையினர் நீண்டதூர ஏவுகணையை பரீட்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது தாக்குதல் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் இந்தியா அரபிக் கடலில் இந்த சோதனையை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது நாட்டில் 130 க்கும் அதிக ஏவுகணைகளைக்கொண்ட அணு ஆயுத களஞ்சியமொன்று உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனீப் அப்பாசி  (Hanif Abbasi) கூறியுள்ளார்.

தம்மிடமுள்ள இராணுவ உபகரணங்களும் ஏவுகணைகளும் காட்சிக்காக வைக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் அண்மையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலால் தற்போது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
 

ஏனைய செய்திகள்