யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெரும் சாதனை!

A/L உயிரியல் பிரிவில் இரட்டையர்களின் இணையில்லா சாதனை!

by Staff Writer 27-04-2025 | 2:10 PM

Colombo (News1st)க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று (26) இரவு வெளியானது.

யாழ்ப்பாணம் கொக்குவில் தலையாளி வைரவர் கோவிலடியை சேர்ந்த இரட்டையர்களான யமுனாநந்தா பிரணவன் மற்றும் யமுனாநந்தா சரவணன் ஆகியோர் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும், தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தாவின் புதல்வர்கள் ஆவர் 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 55 மாணவர்கள் 3A பெற்று சித்தியடைந்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.