.webp)
Colombo (News1st)கதிர்காமம் - மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
குறித்த நபர் மேலும் இருவருடன் கதிர்காமத்திற்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.
மாணிக்க கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.