.webp)
Colombo (News1st)அநுராதபுரம் - கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறி - மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரதன்கடவல பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்