டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள்

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 26-04-2025 | 11:27 AM

Colombo (News1st) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்

இதனால் வைத்தியசாலை நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,465 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 14,600 ஆக அதிகரித்துள்ளது.