கட்டுநாயக்க - ஹீனடியேன துப்பாக்கி பிரயோகம்

கட்டுநாயக்க - ஹீனடியேன துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் காயம்

by Staff Writer 26-04-2025 | 1:12 PM

Colombo (News1st)கட்டுநாயக்க ஹீனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 29 வயதான நபர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவரினால் இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது T 56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரிகளை கைது செய்ய கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.